மகா கும்ப மேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறவுள்ளது. நாள்தோறும் ஏராளமாக பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 39 கோடியே 74 லட்சம் பேர் கும்பமேளாவில் புனித நீராடியதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.