ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பக்தர்களிடம் பெறப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
அதில், ஒரு கோடியே 60 லட்சத்து ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். 63 கிராம் தங்கம், 8 கிலோ வெள்ளி, 162 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்க பெற்றதாகவும் ஆணையர் கூறினார்.