கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்காவில் இயங்கிவரும் பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர், மூன்று ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு நடந்த பயங்கரத்தின் குற்றப்பின்னணியை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்காவுல இயங்கிட்டு வருது இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்க 75 மாணவிகளும், 65 மாணவர்களும் படிச்சுட்டு வறாங்க. இங்க படிச்சுட்டு வர 13 வயதான மாணவி ஒருவர் கடந்த ஒரு மாசமாவே ஸ்கூலுக்கு வராமலேயே இருந்துருக்காங்க. அந்த மாணவிக்கு என்ன பிரச்சனைனு நேரா வீட்டுக்கு போய் விசாரிச்ச ஸ்கூலோட ஹெட் மாஸ்டர்கிட்ட மாணவி சொன்ன விவரங்கள் பகீர கிளப்பிடுச்சு.
ஸ்கூல்ல டீச்சரா வேலைபாக்குற ஆறுமுகம், சின்னச்சாமி, பிரகாஷ் இந்த மூனு பேரும் தான் அந்த மாணவிய பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்காங்கனு தெரியவருது. அதோட அந்த பொண்ணு கர்ப்பமா இருந்ததும், கருக்கலைப்பு செஞ்சுட்டதால தான் ஒருமாசமா ஸ்கூலுக்கு வரலங்கற விசயமும் ஹெட் மாஸ்டர் கிட்ட அந்த பொண்ணு அழுதுகிட்டே சொல்லியிருக்கு.
உடனடியா குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்துல ஹெட் மாஸ்டர் மூலமா புகார் கொடுக்கப்பட்டதோடு, மகளிர் காவல் நிலையத்துலயும் தகவல் சொல்லப்படுது. காவல்துறையினர் நடத்துன விரிவான விசாரணையில ஆசிரியர்கள் முகமூடி அணித்த மூன்று அரக்கர்களின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்துருக்கு.
ஜனவரி 2 ஆம் தேதி வழக்கம் போல ஸ்கூலுக்கு போன அந்த மாணவி, இயற்கை உபாதை கழிக்கிறதுக்காக கழிவறைக்கு போயிருக்காங்க. ஆனா அங்க ஏற்கனவே ஒளிஞ்சுட்டு இருந்த டீச்சர் ஆறுமுகம், அந்த மாணவிகிட்ட தகாத முறையில நடந்துகிட்டதா சொல்லப்படுது.
இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா உன்னோட கல்வி பாதிக்கப்படும்னு சொல்லி மிரட்டுனதாவும் கூறப்படுற நிலையில, அதுக்கு அடுத்த நாள் அதே கழிவறையில வச்சு இன்னொரு டீச்சரான சின்னச்சாமியும் அந்த சிறுமிகிட்ட தகாத முறையில நடந்துகிட்டதும் போலீஸ் விசாரணையில உறுதியாகியிருக்கு.
இந்த இரண்டு டீச்சர்களால பலவந்ததிற்கு ஆளான மாணவி, அந்த பாதிப்புல இருந்து மீண்டு வரதுக்குள்ளாகவே அதே ஸ்கூல்ல 4 ஆம் வகுப்புக்கு பாடம் எடுக்குற இன்னொரு டீச்சரான பிரகாஷும் அந்த மாணவிய மிரட்டி பாலியல் பலாத்காரம் பண்ணியிருக்கதாகவும் கூறப்படுது.
இந்த சம்பவம் வெளிய தெரிய அந்த பகுதியில இருக்க பொதுமக்கள் எல்லாரும் ஸ்கூல முற்றுகையிட்டு போராட்டத்துல ஈடுபட்டாங்க. கொடூர குணம் படைச்ச அந்த மூனு ஆசிரியர்களையும் அரஸ்ட் பண்ணி ஜெயில்ல அடைச்சுருக்க நிலையில, சஸ்பெண்டும் செஞ்சுருக்காங்க.
வேலியே பயிர மேயுர கதையை கேள்விபட்டுருப்போம். ஆனா இந்த மாதிரி சம்பவத்தை கேக்கும் போதே ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் உண்டுபண்ணுது. ஸ்கூலுக்கு படிக்க வர பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய டீச்சர்ஸே கூட்டு சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கத பாக்கும்போது இந்த சமூகம் எத நோக்கி போயிட்டு இருக்குனு தான் கேக்க தோணுது.
கல்வி, வேலைவாய்ப்பு, சமவாய்ப்புனு பெண்ணுரிமையை தூக்கிப்பிடிக்கிற தமிழ்நாட்டுல நடந்துருக்க இந்த சம்பவம் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளோட பாதுகாப்ப கேள்விக் குறியாக்கியிருக்கு.
இந்த சம்பவம் மட்டுமல்ல, இதுமாதிரி பெண்குழந்தைகள் கிட்ட தகாத முறையில நடந்துகிறவங்க யாரா இருந்தாலும் அவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்குறது தான் இனி வரும் காலங்கள்ல இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாம இருக்க ஒரே தீர்வு.