சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எஸ்.பி.ஐ. வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற முயற்சித்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளராக உள்ள ஜான்சி ராணியிடம், கோட்டையம்மாள், ஈஸ்வரி மற்றும் ஜனார்த்தன் ஆகிய மூவரும் 116 கிராம் அளவுள்ள இரண்டு தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற முயன்றனர்.
நகையை மதிப்பீட்டாளரிடம் கொடுத்து சோதனை செய்ததில், போலி தங்க நகை என தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் 3 பேரையும் கைது செய்தனர்.