தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் வலசை வர தொடங்கியுள்ளன.
கூழைக்கடா, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வலசை வந்திருக்கின்றன.
இதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பருவ காலங்களில் தமிழக நோக்கி வரும் பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரித்து சில மாதங்களுக்குப் பின் மீண்டும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பி விடும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.