இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24 -ஆம் தேதி, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 2 விசைப்படகுகளை சிறைபிடித்தனர்.
இந்நிலையில், சிறைக்காவல் முடிந்து மன்னாார் நீதிமன்றத்தில் மீனவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில், 13 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், படகு உரிமையாளர்கள் 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 மீனவர்களுக்கு வரும் 12 -ஆம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனிடையே, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஒரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.