திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 51 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை, மாதம் இரண்டு முறை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் உண்டியல்களில் இருந்து ஜனவரி மாத காணிக்கையாக 2 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரத்து 242 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது.
மேலும் ஆயிரத்து 40 கிராம் தங்கம், 20 ஆயிரத்து 800 கிராம் வெள்ளி, ஆயிரத்து 248 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.