2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முதற்கட்டமாக புதிதாய் 625 மின்சாரப் பேருந்துகளை வாங்கி இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
உலக வங்கி உதவியுடன் சென்னையில் இயக்குவதற்காக 600 மின்சார பேருந்துகளில் 20 டபுள் டக்கர் பேருந்துகளை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒலி ம
ற்றும் காற்று மாசு ஏற்படுத்தாமல் பயணம் செய்யும் வகையில் மின்சார பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.