தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை குழுவினருக்கு வழங்கப்பட்டு வந்த வெள்ளி வேலை அறநிலையத்துறை அதிகாரி தர மறுத்ததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பழனி பாதயாத்திரை குழுவினர் கடந்த 2016-ம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி வேலை அப்பகுதியில் உள்ள முத்து மாரியமன் கோயிலுக்கு வழங்கினர்.
ஆண்டுதோறும் இந்த வேலை பாதயாத்திரை பக்தர்கள் பழனிக்கு கொண்டு செல்லும் நிலையில், இந்த ஆண்டு, வேலை செயல் அலுவலர் தரமறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பாதயாத்திரை குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.