திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் சன்னதியில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர்.
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை உடன் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.