நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் ஏற்பட்ட கடும் புகைமூட்டத்தால் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குப்பைக் கிடங்கை குடியிருப்பு மற்றும் ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.