டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.
ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து போட்டியிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் களம் கண்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் பாஜகவுக்கே சாதகமான சூழல் உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.