திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் வந்திதா பாண்டே. 2010-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான இவர் விருதுநகர் மாவட்ட சிவகாசியில் ஏஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு இறுதியில் அவர் டிஐஜியாக பதவி உயர் பெற்று, திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வந்திதா பாண்டே மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.