டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டன.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக 46, இடங்களிலும், ஆம் ஆத்மி 24 தொகுதியிலும், முன்னிலை வகித்து வருகிறது.
புது தில்லி சட்டமன்றத் தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை விட பாஜகவின் பர்வேஷ் வர்மா 225 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் பாஜகவின் ஷிகா ராயை விட 4,440 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
கல்காஜி தொகுதியில் பாஜகவின் ரமேஷ் பிதுரியை விட டெல்லி முதல்வர் அதிஷி 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.