தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த அழைத்து செல்லப்பட்ட மக்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரும்பாறை பகுதியில் 16 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் காட்டு தீ பற்றியது. இந்த நிலையில், வனத்துறை காவலராக பணியாற்றும் ஆனந்த பிரபு என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் முத்துகிருஷ்ணன் மற்றும் பாப்பையா ஆகிய இருவர் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
ஆனால், இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.