சிவகங்கை அருகே திறக்கப்படாமல் இருக்கும் அரசு பள்ளியை உடனே திறக்க வலியுறுத்தி, பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய 2 வகுப்பு அறைகள் கட்டப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளதால், சமுதாய கூடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமையில் ஏராளமான பாஜகவினர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார், பள்ளி திறக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தை அடுத்து போராட்டம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டது.