காஞ்சிபுரத்தில் குப்பை அள்ளும் பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என மாநகராட்சியின் பணிகள் குழு தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 75 முதல் 80 டன் வரை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அள்ளப்படுகின்றன. மொத்தம் உள்ள 52 வார்டுகளில் குப்பை அள்ளும் பணியினை தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு 93 லட்ச ரூபாய் பணிக்கான தொகையை வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள எண்ணிக்கையை அதிகமாக கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டிய பணிகள் குழு தலைவர் பணத்தை வழங்க கூடாது என்று வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.