சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சந்தப்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆனால், வேலகவுண்டம்பாளையம் மற்றும் இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் பேருந்து நிறுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதனை கண்டித்து பெற்றோருடன் இணைந்து மாணவ, மாணவிகள் பேருந்தை சிறைப்பிடித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.