திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திடீரென பூட்டியதால் மக்கள் சிரமமடைந்தனர்.
சின்னவேப்பம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளராக சிவகுமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஊராட்சி செயலாளரை வெளியேற்றி விட்டு ஊராட்சி அலுவலகத்தை துணைத் தலைவர் மற்றும் அவருடன் 5 வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து பூட்டு போட்டுவிட்டு சென்று உள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு ஏற்பட்டதால் இவ்வாறு செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.