சென்னையின் புறநகர் பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துவந்த நிலையில் அதிகாலையில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.