வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவு செய்த முகவர்கள் வாயிலாக மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் என குடிப்பெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரேந்தர் பகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள ‘பாத்துப் போங்க’ என்ற பெயரில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்றது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, குடிபெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரேந்தர் பகத் துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு செல்வது முறையானது அல்ல என தெரிவித்தார்.