பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடினர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மகா கும்பமேளாவில் புனித நீராடி, அனைவரின் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதியின் அருள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தை கொண்டுவர வேண்டுமெனவும் பதிவிட்டுள்ளார்.