டெல்லியின் முதலமைச்சர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 46 தொகுதிகளில் பெரும்பான்மையை தாண்டி முன்னிலை வகித்துவரும் நிலையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மக்களும் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 2 மடங்கு அதிக சக்தியுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.