டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதையடுத்து, கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாஜக கொடியை ஏந்தியவாறே சாலையில் ஆடிப்பாடி கட்சியின் வெற்றியை கொண்டாடினர். மேலும், பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வெற்றி முழக்கமிட்டனர்.