திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பிரதமர் மோடியும் புனித நீராடினார்.
இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் 10ம் தேதி புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.