ஆந்திராவில் செம்மர கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சானிபாயா பகுதி அருகே வந்த காரை போலீசார் துரத்தி மடக்கிப்பிடித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எட்டு பேரை கைது செய்த போலீசார் கார், பைக், பத்து செம்மர கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, கடிஹனஹள்ளியில் தைல மரத்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 185 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 195 செம்மர கட்டைகளின் மதிப்பு 4 கோடியே 20 லட்சம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.