டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றதை, நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி தீர்த்தனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், கர்நாடக பாஜக தலைவர்கள் பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெடி வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.