வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நாதக ஏஜெண்டுகளை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டி அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தங்கள் கட்சியின் ஏஜென்டுகளை அனுமதிக்கவில்லை என கூறி போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.