டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்தித்த நட்சத்திர வேட்பாளர்கள் குறித்து பார்ப்போம்..!
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, டெல்லி ஓக்லா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அமானத்துல்லா கான் முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மணீஷ் சவுத்ரி, காங்கிரஸின் அரிபா கான் மற்றும் AIMIM கட்சியின் வேட்பாளர் ஷிஃபா உர் ரெஹ்மான் கான் ஆகியோர் பின்னடைவு சந்தித்தனர்.
இதேபோல, மாளாவியா நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி மற்றும், காங்கிரஸ் வேட்பாளர் ஜிதேந்தர் குமார் கோச்சார் பின்னடைவு சந்தித்துள்ளனர்.
ஜங்புரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் தர்விந்தர் சிங் மர்வா வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மணீஷ் சிசோடியா மற்றும், காங்கிரஸின் ஃபர்ஹாத் சூரி ஆகியோர் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.