டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங்-கிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதேபோல, ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங்கிடம் தோல்வியை தழுவினார்.