குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும், வைர வியாபாரி ஜெயின்ஷாவின் மகளான திவா ஷா ஆகியோருக்கு ஜெயின் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில், எந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்தை முன்னிட்டு பல்வேறு சமூக சேவைகளுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாக கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.