டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 8 இடங்களை வென்றிருந்த பாரதிய ஜனதா கட்சி இந்த முறை 45க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளது.
அதே நேரம் கடந்த முறை 62 இடங்களை கைப்பற்றி இருந்த ஆம் ஆத்மி கட்சி இம்முறை 20க்கும் அதிகமான இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அக்கட்சியின் முன்னணி தலைவர்களான டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் பாஜக வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவி உள்ளனர்.
கடந்த 2013 சட்டமன்ற தேர்தலில் வென்ற தொகுதிகளை விட இந்த முறை ஆம் அத்மி குறைவான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அக்கட்சி மீது டெல்லி மக்களுக்கு உள்ள அதிருப்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த 2015, 2020 மற்றும் 2025 சட்டமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களை கூட வெல்ல முடியாமல் ஹாட்ரிக் பூஜ்ஜியத்தை பதிவு செய்துள்ளது.