டெல்லி சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் முன்னிலை வகித்து பாஜக வெற்றி முகத்தில் உள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.
ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து போட்டியிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் களம் கண்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக 38 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
10 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆத் ஆத்மி, 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.