சென்னையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புல்டோசர் உதவியுடன் அழித்தனர்.
சென்னை பர்மா பஜாரில் கடந்த 2021-ம் ஆண்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 806 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவற்றை அழிக்கும்படி ஜார்ஜ் டவுன் 8-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தாமோதரன் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் வைத்து 806 மதுபான பாட்டில்களையும் புல்டோசர் உதவியுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.