தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவிய நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரியங்கா காந்தி, டெல்லி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கட்சி கூட்டங்களிலேயே மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்ததாகக் கூறினார். மேலும், வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.