திருச்செந்தூர் முருக பெருமான் கோயிலில் வரும் 11-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி தென்காசி பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கினர்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், கல்லூரணி, திப்பணம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள், அலகு குத்தியும், அலங்கார ஊர்திகளுடனும் பாதயாத்திரை மேற்கொண்டனர்.