கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, கொல்கத்தா அருகே உள்ள ராஜர்ஹட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது நீதிக்கான போராட்டத்தில் மோகன் பகவத் தங்களுடன் இருப்பதாகவும், தம்மால் முடிந்தவரை தங்களுக்கு உதவுவதாகவும் கூறியதாக பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்தார். மேலும், இந்த சந்திப்பின்போது தங்களது கோரிக்கையை கடிதமாக கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.