பாஜக கூட்டத்தில் தொண்டர் ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தி அவருக்கு உதவுங்கள் என கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்கு பின் அங்கு ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்துகொண்ட நிலையில், அங்கிருந்த ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இதை பார்த்த பிரதமர் மோடி, உடனடியாக தனது பேச்சை நிறுத்திவிட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
















