மணப்பாறையில் 4ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் உட்பட, தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பாலியல் கொடுமைகளை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பல பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.