டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அதிஷி ராஜினாமா செய்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஆளுநர் மாளிகை சென்ற அதிஷி, துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனிடையே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அதிஷி நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கட்சி தோல்வியடைந்தபோது இந்த கொண்டாட்டம் தேவையா? என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.