காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண், உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 6 -ஆம் தேதி திருப்பூரில் இருந்து 4 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் பயணித்துள்ளார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கே.வி. குப்பத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர், வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டுள்ளார்.
இதில், படுகாயமடைந்த அந்த பெண் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அப்பெண்ணின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது. இந்நிலையில், சிறப்பு மருத்துவக்குழு பரிந்துரையின்பேரில், உயர் மருத்துவ சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார்.