டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
டெல்லியின் 70 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மி 22 இடங்களை கைப்பற்றிய நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் பாஜக அமரவுள்ள நிலையில், டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் எனக் கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி பாஜக தலைவர் பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, டெல்லி பாஜக முன்னாள் தலைவர் சதீஷ் உபாத்யாய், மஜீந்தர் சிங் மற்றும் ஹரிஷ் குரானா ஆகிய 5 பேரில் ஒருவரை பாஜக தலைமை டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியின் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, அமித்ஷாவை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.