தானிய ஏற்றுமதியில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.47 லட்சம் டன்களாக உயர்த்தி குஜராத் மாநிலம் சாதனை படைத்துள்ளது.
தானியங்களைப் பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் உலக தானியங்கள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் தானியங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் திகழ்ந்து வரும் இந்தியா, துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பயிறு வகைகளில் தன்னிறைவை அடைந்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் இருந்து 2 லட்சத்து 47 ஆயிரத்து 789 டன் அளவிலான தானியங்கள், கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. துவரை மற்றும் கொண்டைக்கடலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் குஜராத், பச்சைப்பயிறு மற்றும் உளுந்து உற்பத்தியில் நாட்டில் 5-வது இடத்தில் உள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.