ஆன்லைன் விளையாட்டுகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பணம் செலுத்தி ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் விளையாடுவோரின் வயதை அறியும் விதமாக அவர்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்பி விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.