ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.சி.சந்திரகுமாருக்கு, சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.