ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபோது, பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து, தேர் நான்கு உத்தர வீதிகளில் வழியாக வலம் வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.