திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து 75 ஆம் ஆண்டு பவள விழாவை உற்சாகமாக கொண்டாடினர்..
நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 75 ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி நுழைவாயில் தூண் அமைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், இசைக் கச்சேரி, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.