மூன்றாயிரம் பணியாளர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.டி.துறையில் மிக முக்கிய நிறுவனமாக மெட்டா நிறுவனம் பார்க்கப்படுகிறது. சமீப காலமாக ஏ.ஐ. வளர்ச்சி காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் மெட்டா நிறுவனம் இறங்கி உள்ளது.
இந்நிலையில், பணியில் திறம்பட செயல்படாத மூன்றாயிரம் ஊழியர்களை அடுத்த ஒருவார காலத்திற்குள் மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.