கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன், குள்ளம்பாளையம், பாரியூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள குள்ளம்பாளையம், பாரியூர், நஞ்சுண்டான் பாளையம், மொட்சூர், கலிங்கியம், பொளவகாளிபாளையம் ஊராட்சிகளை, கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனால், 100 நாள் வேலை வாய்ப்பு, கிராமங்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியுடன், குள்ளம்பாளையம், பாரியூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காராவிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.