கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
கேசவநாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள், 12ஆம் வகுப்பு மாணவர் மற்றும் இளைஞர் ஒருவர் என 5 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றனர்.
அப்பொழுது அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் எதிர்பாரதவிதமாக மோதியதில், 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 12ஆம் வகுப்பு மாணவர் சுனில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கை ஒட்டி வந்த இளைஞர் மோகன்ராஜ் உட்பட பள்ளி மாணவிகள் பவித்ரா, சாந்தினி, சத்யா ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.